அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என்று தொடங்கும் இந்த பாடல் இன்று வரை பள்ளி குழந்தைகளின் அச்சத்தை போக்கும் ஒரு அற்புத பாடலாக உள்ளது. தமிழ் வழி கல்வியாக இருந்தாலும் ஆங்கில வழி கல்வியாக இருந்தாலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு இந்த பாடை ஏதோ ஒரு சூழலில் நிச்சயம் தம் செவிதனில் கேட்டு பூரித்திருப்பர். இந்த பாடலை கேட்கும் சமயத்தில் சிறுவர்களின் மனதில் இனம் புரியாத ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் மிளிரும். பாரதியின் கனவுகள் அனைத்தும் பிள்ளைகளின் கண்களில் பிரதிபலிக்கும். அந்த அளவிற்கு உணர்வுகளை உயிர்த்தெழ செய்யும் சக்தி இந்த பாடலுக்கு மாத்திரமே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பாரதியின் புகழ். வளர்க தமிழ்.