பாப்பா பாட்டு – பாரதியார்

cover image

ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

 

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 

 

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக் கூட்டி விளையாடு பாப்பா, எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு இரக்கப் படவேணும் பாப்பா. 

 

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா; வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா. 

 

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா.


0 0

Tags:

Share:

All Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *